ஐந்து இல்லே மூணு - சீகேட் ஹார்ட் டிஸ்க் வாரண்டி

அஸெம்பிள்ட் கம்ப்யூட்டர் அல்லது extra ஹார்ட் டிஸ்க் வாங்கனும்னு நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான செய்தி.
”ஹார்ட் டிஸ்க் வாங்கனுமா, சீகேட் நல்ல பிராண்ட்”ன்னு எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
சில மாதங்கள் முன்னால் வரை, அதற்கு 5 வருடம் வாரண்டி கொடுத்தார்கள்.
ஆனால் ஜனவரி 3, 2009-ல் இருந்து சில வகை ஹார்ட் டிஸ்க்களுக்கு (டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் உபயோகப்படுத்தப்படும் சீகேட் பாரகுடா 7200 ஸீரிஸ், etc ) வாரண்டியை 5 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக குறைத்து விட்டார்கள்.

அடடே! முன்னாடியே தெரியாம போச்சே என்கிறீர்களா?
உங்கள் ஹார்ட் டிஸ்க்கை ஜனவரி 3க்கு முன்னால் வாங்கி இருந்தால், உங்களுக்கு 5 வருட உத்தரவாதம் உண்டு.
மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
No comments:
Post a Comment