Search This Blog

Tuesday, December 20, 2011

film subtitiles


திரைபடங்களுக்கு சப்டைட்டில் தேட

இணையத்தில் நாம் பல திரைப்படங்களை டவுன்லோட் செய்கிறோம். அவை ஆங்கில படங்களாகவோ அல்லது பிற மொழி படங்களாகவோ இருக்கலாம். ஆங்கில படங்களை சப்டைட்டிலோடு தற்போது அதிகமானோர் பார்க்கின்றனர். மேலும் பிற மொழி படங்களான கொரிய, ஸ்பானிஷ் மொழி படங்களை சப்டைட்டிலோடு பார்த்தால் எளிதாக புரிந்து பார்க்க முடியும்.

திரைபடங்களுக்கு சப்டைட்டில் தரும் பல தளங்கள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை Opensubtitle,Subscene. இவை தவிர பல தளங்கள் உள்ளன. அனைத்து படங்களின் சப்டைட்டில்களும் ஒரே தளத்தில் கிடைப்பதில்லை. எனவே அவற்றை தேட வேண்டியதிருக்கும். TinySubs என்ற வலைத்தளம் இதனை எளிதாக்குகிறது.



31 சப்டைட்டில் தரும் வலைதளங்களில் இருந்து சப்டைட்டில் தேட மற்றும் டவுன்லோட் செய்ய உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட ஒரு தளத்தில் தேடவும் உதவுகிறது.



மேலும் உங்கள் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் இதனை நீட்சியாக நிறுவி எளிதாக பயன்படுத்தலாம்.

வலைதளத்திற்கு செல்ல TinySubs Subtitle Search Engine

குரோம் நீட்சியாக நிறுவ Chrome Extension

நெருப்புநரி நீட்சியாக நிறுவ Firefox Addon

No comments:

Post a Comment