
சரி உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் (ஒரு படத்திற்கான) சம்பள விவரங்களைப் பார்ப்போமா..?
அஜித் - 15 கோடி ரூபாய்
விஜய் - 15 கோடி ரூபாய்
சூர்யா - 15 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
விக்ரம் - 10 கோடி ரூபாய்
கார்த்தி - 10 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை
தனுஷ் - 5 முதல் 7 கோடி ரூபாய்
சிம்பு - 5 கோடி ரூபாய் + சென்னை விநியோக உரிமை
விஷால் - 3 கோடி ரூபாய்
ஆர்யா - 2 கோடி ரூபாய்
ஜீவா - 1.50 கோடி ரூபாய்
இவ்வளவு சொன்னீங்களே... சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகியோரின் சம்பளங்களை சொல்லவே இல்லைன்னு கோச்சுக்காதீங்க... இதோ தர்றோம். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் 'எந்திரன்' படத்தில் நடிப்பதற்கு 24 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் சம்பளமாக பேசப்பட்டதாம். உலக நாயகனுக்கு எப்படியும் 20 கோடி ரூபாய் சம்பளமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். அது சரி இப்ப இவ்ளோ டீடெய்ல்ஸ் என்னத்துக்குனு தானே கேட்குறீங்க.... விஷயத்துக்கு வருவோம். 'பில்லா' வெற்றிக்குப் பிறகு 'ஏகன்', 'அசல்' என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் 'மங்காத்தா'. இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா... ரூ 17 கோடி! இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் 'பில்லா 2' படத்துக்கு அல்ல. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை 'பில்லா 2' ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம். இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள 'பில்லா 2' படத்தை ரூ. 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ. 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம். யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்!
No comments:
Post a Comment