Search This Blog

Thursday, January 20, 2022

Hair Dryer Low cost with 2 years warranty -1200w( Rs. 299-329)

 

BPL 1200W Foldable Hair Dryer with Ionic Air Function for fast dry and silky hair, 3 Temperature Settings, Overheat Protection, Detachable Concentrator, 2 Years Warranty, White and Pink





Note: If you buy from Jiomart it cost 299 or if you buy from reliance digital it costs 329

Unboxing of this product video is here:





Buy Link:

https://www.reliancedigital.in/bpl-1200w-foldable-hair-dryer-with-ionic-air-function-for-fast-dry-and-silky-hair-3-temperature-settings-overheat-protection-detachable-concentrator-2-years-warranty-white-and-pink/p/491903185

Welcome to 2022

 After the long time , we decided to resume our website with exiting contents and fun.

Please stay tuned for newer updates.

Monday, February 17, 2014

Best Cloud Storages


மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை[1] என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

Copy.com the best and more space giving cloud storage.
free cloud space
https://copy.com?r=yAw0ET

Sunday, April 1, 2012

அய்யய்யோ கிரிக்கெட்: நினைத்தாலே பயமாக இருக்கிறது


போதும், போதும் என்கிற அளவிற்கு இந்த கிரிக்கெட் காய்ச்சல் அனைவருக்கும் பரவிவிடும். பிடிக்காதவர்களையும் படுத்தி எடுத்துவிடும்."ஸ்கோர்' என்ற வார்த்தையால் கொன்று எடுத்துவிடுவார்கள். கடமைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, உழைப்பை வீணடித்தபடி வீட்டின் தொலைக்காட்சியில் மொத்தகூட்டமும் முடங்கிப்போகப் போகிறது.இது பெரிய குற்றம் என்றால் கடமையை, வேலையை செய்யப்போன இடத்தில்,"டிவி' யிலும், கம்ப்யூட்டர் திரையிலும் கிரிக்கெட் பார்ப்பது குற்றத்திலும் கொடியது, துரோகத்தில் சேர்த்தி. இந்த குற்றத்தையும், துரோகத்தையும் எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் செய்ய, மொத்த கூட்டத்தையும் மூளைச்சலவை செய்து தயாரக்கி வைத்தாகிவிட்டது. இதை விமர்சிப்பவன்தான் இன்றைய காலக்கட்டத்தில் கோமாளியாக சித்தரிக்கப்படுவான்.

தலைநகரின் தலைமைச் செயலகமே மின்தட்டுப்பாடு காரணமாக "ஜெனரேட்டரில்' ஓடிக்கொண்டு இருக்கிறது. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வை சந்திக்க மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் புனித பணியை மேற்கொள்ளப் போகிறார்கள். மின்சாரம் இல்லாததால், பல உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் கூட நடக்காமல் தள்ளிப்போடப்படும் நிலையில், இரவை பகலாக்கும் விதத்தில் வாரியிறைக்கப்படும் வெளிச்சத்திற்கு காரணமான மின்சாரத்தை வீணாக்கும் கிரிக்கெட் இந்த நேரத்தில் அவசியம்தானா என்று வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் பிரபுதேவா, பிரியங்கா சோப்ரா பங்கேற்கும் நடனங்களுடன் சென்னையில் கிரிக்கெட் திருவிழா குதூகலமாக துவங்கிவிடும். மின்சாரமே இல்லாவிட்டாலும் "ஜெனரேட்டரை' ஒட்டியாவது கிரிக்கெட்டை நடத்தி விடுவார்கள். "ஜெனரேட்டருக்கான' டீசலுக்கு எங்கே போவது, கொஞ்சநாளைக்கு மானியமாக வழங்கப்படும் டீசலை இந்த பக்கம் திருப்பிவிடவேண்டியதுதான். நமக்கு கிரிக்கெட்தானே முக்கியம். ஒரு வேளை வழக்கின் அடிப்படையில் கிரிக்கெட் நடைபெறாமல் போனால் இடிவிழுந்தது போலாகிவிடுவான் நம் மறத்தமிழன். காரணம் ஒரு சில மணி நேர ஆட்டத்தை காண, முதல் நாளே வரிசையில் நின்று, போலீசிடம் அடிபட்டு, இந்த ஆட்டத்தை பார்க்க 700 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டை முண்டியடித்து வாங்கி தீர்த்துவிட்டார்கள். பால் விலை, பஸ் டிக்கெட் விலை கூடிவிட்டது என்று இவர்கள் எல்லாம் வாயைத்திறந்து பேசவே கூடாது.

200 நாடுகளுக்கு மேல் இருந்தாலும், கடந்த 100 ஆண்டுகளாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 நாடுகளில் மட்டுமே வளர்ந்த இந்த கிரிக்கெட்டிலும், இரண்டு நாடுகள் இன்றைக்கும் உப்புக்கு சப்பாணிதான்.தோற்பதற்காகவே விளையாட வருபவர்கள். பிறகு ஒரு நாட்டை ஆட்டையிலே சேர்க்கமாட்டார்கள். மீதம் உள்ள ஐந்து நாட்டின் வீரர்களை ஆளாளுக்கு ஏலம் எடுத்து கோடி,கோடியாக சம்பாதிக்க நடத்தப்படுவதுதான் இந்த சீசன் கிரிக்கெட் விளையாட்டு. வரும் 4ம் தேதி துவங்கி மே மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன. தோராயமாக ஒரு வீரர் 16 ஆட்டங்களில் கலந்து கொண்டு 48 மணிநேரம் களத்தில் இருப்பார். இதில் பன்னாட்டு விளம்பரம் அச்சிடப்பட்ட பேட்டை "கேமரா' முன் நீட்டிய நேரம், எப்போதாவது பந்தின்பின் ஓடிய நேரம், எப்போதும் ரசிகைகளுக்கு "ஆட்டோகிராப்' போட்டுக்கொடுத்த நேரம் உள்ளிட்டவையும் அடங்கும். ஒரு நிமிடத்திற்கு 1200 ரூபாய் அளவில் சம்பாத்தியம் என்றால் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் மயக்கமே வரும்.இதனால்தான் டெஸ்ட், ஒருநாள் போட்டியைவிட இந்த "டுவென்டி-20'யில் தான் வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ரொம்ப மெனக்கெட வேண்டாம். ஐந்து நாளும் வெயிலில் நிற்கவேண்டாம். நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று "சீன்' காட்ட வேண்டாம்.

உலக கோப்பையின் போது ஓட, ஓட விரட்டி தோற்கடிக்கப்பட்ட இலங்கை அணியின் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார். அவருடன் சச்சினும் கைகோர்த்துக்கொண்டு களம் இறங்குவார். கேட்டால் "கிரிக்கெட் இஸ் ஏ கேம்' என்பார்கள். அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. பணம் தான் பிரதானம். பல காலமாக கிடப்பில் உள்ள எல்லைப்பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை பற்றி ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேச நேரமில்லாத இந்தியா-பாக்., பிரதமர்கள் இணைந்து பல மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டாயிற்றே. போதும்போதா தற்கு சோனியாவும், ராகுலும் கூட சிறப்பு பார்வையாளர்கள். இப்படி முக்கியஸ்தர்கள் துவங்கி சாமன்யன் வரை தந்த ஆதரவால் மண்சார்ந்த, மரபுசார்ந்த விளையாட்டை முனை தெரியாமல் நசுக்கிய பெருமை இந்த கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. நசுக்கப்பட்டதில் தேசிய விளையாட்டான ஹாக்கியும் அடக்கமாகிப்போனதுதான் பெரிய வேதனை.

இப்படி தேசமே கொண்டாடிப்பார்த்த, மும்பையில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் "மேட்ச் பிக்சிங்' சூதாட்டம் நடந்தது என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தக்க ஆதாரம் இருப்பதாக சொல்லி செய்தி வெளியிட்டது. இதற்கு ஒரு நடிகைதான் "மீடியேட்டர்' என்று முகம் தெரியாமல் ஒரு நடிகையின் படத்தையும் வெளியிட்டது. அப்படியானால் அன்று ரசிகர்கள் காட்டு கத்தலாய் கத்தியது, விடிய, விடிய "டிவி', பார்த்தது, விடிந்தபிறகும் வெடி போட்டது, முகம் தெரியாதவர்களுக்கு இனிப்பு வழங்கியது எல்லாமே ஒரு விளையாட்டு என்ற பெயரில் நடந்த நாடகத்திற்குதானா.

நான்தான் அந்த அரைகுறை உடையுடன் கூடிய நடிகை என்று தானாகவே மீடியா முன் ஆஜரான வடமாநில நடிகை நூபுர், எனக்கு எந்த கிரிக்கெட் வீரர்களையும் தெரியாது, எனது புகழுக்கு(!)களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது விடிந்ததும் வழக்கு போடப்போகிறேன் என்று ரொம்பவே ஆவேசப்பட்டார். விடிந்து பார்த்தால் எனக்கு "லேசாக' இலங்கை வீரர் தில்ஷனைத் தெரியும் என்றார். அத்தோடு ஆவேசம் அடங்கிவிட்டது. இன்றைய தேதிவரை வக்கீல் "நோட்டீஸ்' கூட அனுப்பவில்லை. இப்படி எப்படி பார்த்தாலும் கிரிக்கெட் என்பது நாடகமாகவும், மூளைச்சலவை செய்வதாகவும், இளைய வயதினரின் நேரத்தை கொல்வதாகவும் உள்ள ஒன்றாகவே உள்ளது. கிட்னியை விற்று கூட கிரிக்கெட் பார்ப்பேன் என்று பெங்களூரு ரசிகர் சொன்னதாக வந்த செய்தியைப் படித்தாலே எந்த அளவு கிரிக்கெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இவர், இந்தியாவின் ஒரு பானை சோற்றுக்கான ஒரு பருக்கையை போன்றவர். சச்சினை பொறுத்தவரை நூறு சதம் அடித்தவுடனேயே "ரிட்டையர்' ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ எனக்கு தெரியும் எப்போது ஒய்வு பெறுவது என்று சொல்லிவிட்டார். யாருக்கு தெரியும் அவரது பல நூறு கோடி பெறுமான அசையா மற்றும் அசையும் சொத்துக்களைத் தாண்டி உள்ள கடனை அடைப்பதற்காக விளையாடுகிறாரோ என்னவோ. பாவம் வெளிநாட்டில் இருந்து பரிசாக வந்த காருக்கு கூட வரி விலக்கு கேட்டவர்தானே. இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லையே என்று வேறு பலருக்கு வருத்தம். நீதிபதி மார்கண்டேயே கட்சூ நன்றாகத்தான் கேட்டார், "பாரத ரத்னா என்பது சமூகத்திற்காக சேவை செய்தவர்களுக்காக தரப்படும் மிக உயர்ந்த விருது, இதை தங்களது சுய முன்னேற்றம் மற்றும் வருமானத்திற்காக செயல்படும் கிரிக்கெட் வீரர்களும், சினிமாக்காரர்களுக்கும் கேட்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. அந்த விருதை இனியும் கொச்சை படுத்தாதீர்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது' என்றார். நமக்கும்தான்.

நம்மை "ஹீரோ'வாக தலையில் வைத்து கொண்டாடும் தேசத்தில் மாறி,மாறி மதுபான விளம்பரங்களில் நடிக்கிறோமே, நமது ரசிகர்கள் நாம் சொன்னால் நஞ்சை கூட ரசித்து குடித்துவிடுவார்களே என்று, கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் தோனியும், ஹர்பஜனும் மதுபான விளம்பரங்களில் தோன்றி, குடிப்பதை உற்சாகப்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள். பணமும், செல்வாக்கும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கிரிக்கெட் அமைப்பின் எண்ணத்திற்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. தேர்தல் சமயம் பாதுகாப்பு தரமுடியாது கொஞ்சம் காலம் தள்ளி விளையாட முடியுமா என்று கேட்டதற்கு, அதெல்லாம் முடியாது என்று தென் ஆப்ரிக்காவிற்கு சென்று விளையாடியவர்கள்தானே இவர்கள். இவர்களுக்கு பணமே பிரதானம். உண்மையில் இந்திய அணி என்பது ஒன்றும் இந்தியாவிற்கு கட்டுப்பட்ட அணி கிடையாது. இதனால் இந்தியாவிற்கு எந்த வருமானமும் கிடையாது. இந்திய அணி என்ற பிராண்டை வைத்துக்கொண்டு பணத்தால் குளிப்பது சில தனியார் அமைப்புகள்தான்.இவ்வளவு வருமானம் வந்தபோதும் வரி செலுத்துவதில் நிறைய முரண்பாடு உண்டு. யாரும் கேள்வி கேட்க முடியாது.

தகவல் அறியும் சட்டத்தில் இருந்து கூட விலக்கு பெற்று உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் தேசம். இவர்கள் மீது காட்டும் கண்மூடித்தனமான பாசம்தான். வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் நாளுக்கு நாள் பெருகிவரும் ஏழை இந்தியாவில், பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கே பரிதவிக்கும் பழமையான தேசத்தில், அடிப்படை தேவைகளுக்கே அல்லல் படும் எளிய நாட்டில், கிரிக்கெட்டை விளையாடுங்கள்; ஆனால் அதை திருவிழா போல கொண்டாடாதீர்கள். கிரிக்கெட்டிற்கு எதிரான புலம்பலாக இதை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆர்ப்பாட்டத்தில், ஆராவாரத்தில் மற்றவர்களின் குறிப்பாக மாணவர்களின் நலனை, எதிர்காலத்தை நசுக்கிவிடாதீர்கள் என்ற வேண்டுகோளாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். வேண்டுமானால் கெஞ்சலாக கூட வைத்துக்கொள்ளுங்கள். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். முரண்பாடாக பார்க்காதீர்கள் என்பதுதான் அவர்கள் தரப்பில் சொல்லும் ஒரே வார்த்தை. அதையேதான் நாம் திருப்பிச் சொல்கிறோம். உங்களிடம் உள்ள முரண்பாடுகளை விளையாட்டாக்காதீர்கள்.

thanks:

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்:
                            
                         IPL (இந்தியன் ப்ரீமியர் லீக்) -2008 ல் ஆல் துவக்கப்பட்டது.இந்த பணக்கார விளையாட்டு உலகமெங்கிலும் மிகவும் பிரசித்தம்.இதற்க்கான ஏலத்தில் அனைத்து பிரபல வீரர்களும் கலந்து கொண்டார்கள்.இந்திய வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.பல வெளி நாட்டு வீரர்களும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.சில முன்னனி வீரர்கள் ஏலம் போகவில்லை.ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிக போட்டி.

இதன் வெற்றியாளர்கள்:
2008:ராஜஸ்தான் ராயல்ஸ்
2009:டெக்கான் சார்ஜர்சஸ்
2010:சென்னை சூப்பர் கிங்ஸ்
2011:சென்னை சூப்பர் கிங்ஸ்

தொடர்ந்து 3வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் சென்னை களம் காண்கிறது.


Saturday, March 31, 2012

nokia E51


என் கைபேசி:


             
                 நான் நோக்கியாவின் கைபேசியை சுமார் ஒரு வருடமாக உபயோகித்து
வருகிறேன்.இந்த கைபேசி உபயோகிக்க சிறந்த மாடல் ஆகும்.இதில் சிம்பியான்
ஆப்ரேடிங் சிஸ்டம் வெர்ஷன் 3 உள்ளது. நோக்கியாவின் கைபேசிகளை மிகவும்
சுலபமாக உபயோகிக்க முடியும் இதுவும் சுலபமானதே. இது 16 GB வரை
நினைவு அட்டையை ஏற்க்கக்கூடியது.செயல்திறனும் போதுமான அளவிற்க்கு
உள்ளது.இது 2009 மாடல் என்பதால் புதிய விளையாட்டுக்கள் எதையும்
நிறுவமுடியாது.ஆனால் தொடுதிரையற்ற அனைத்து மென்பொருள்களையும்
ஏற்க்கிறது.பேட்டரி பவரும் 1 நாள் வரை முழுமையாக இருக்கும்.இது 3ஜி ஐ
ஆதரிக்கிறது.ப்ளூடூத் ,வைஃபை,ஜிபிஆர்எஸ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
இதில் 2 மெகா பிக்சல் கேமரா உள்ளது.

to view gsmarena review:
www.gsmarena.com/nokia_e51-2106.php

Friday, March 30, 2012

ஜோக்


கிராமவாசி: மின்சார கட்டணம் எவ்வளவு உயர்த்தினாலும் எனக்கு கவலை
                      இல்லை

நகரவாசி: ஏன் அவ்வளவு பணம் வச்சிருக்கியா?

கிராமவாசி: இல்லை சார்,எங்க ஊர்ல மின்சாரமே வரதில்ல
                     எல்லாருமே குறைந்த பட்ச கட்டணம் தான்.
நகரவாசி:??????